Posts

Showing posts from December, 2020

அந்தணர்க்கு ஏன் இறையிலி நிலங்கள்?

  அந்தணர்களுக்கு உரிய ஆறு முதன்மையான கடமைகளை ஆறு தொழில்களாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல் என்கின்றார். ' பார்ப்பனப் பக்கம் என்பது பார்ப்பனர் புரியும் தொழில் பாங்குப் பகுதி. இதனைத் தொல்காப்பியம் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்று குறிப்பிடுகிறது. [1] [2] இதனைத் தொல்காப்பியர் வாகைத்திணையின் ஏழு பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். ஆறு வகை இதற்கு உரை எழுதும் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன என்று குறிப்பிடுகிறார். மேலும் ஒழுக்கத்தான் மிகுதல் வாகையாம் எனவும் குறிப்பிடுகிறார். இந்த ஆறுக்கும் இவர் மேற்கோள் பாடல்களையும் தருகிறார். அவற்றுள் நீர் நாண நெய் வழங்கியும், எண் நாணப் பல வேட்டும் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் வாழ்ந்தான் எனக் காட்டும் ஆவூர் மூலங்கிழார் பாடல் [3] குறிப்பிடத் தக்கது. மற்றும் ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய வேள்வி முற்றிய வயவாள் வேந்தே [4] வேட்பித்தல் பணிக்கு எடுத்துக...

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare

Image
  காதலின்பத்தை முற்றுமாகத் துய்க்க ஏற்ற பருவம் இளமைக்காலமேயாகும் என்றே பலரும் கருதுகின்றனர். இதைக் கவிஞர்களும் காலந்தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். தற்காலக் கவிஞர் கண்ணதாசன் அதைக் கூறியதையும் அக்காலக் கம்பன் அதைக் குறிப்பிட்டதையும் முதலில் காண்போம். இறுதியாக “காலமே இது பொய்யடா” என்னும் பொருளில் ஒட்டுமொத்த வாழ்க்கையே பொருளற்றது என்று ஷேக்ஸ்பியரின் ம-க்பெ த் நாடகத்தில் கதாநாயகன் ம-க்பெ த் நீடுரை செய்வதையும் கருதுவோம். அவ்வுரையின் தமிழாக்கமும் ஈண்டு த் தரப்பட்டுள்ளது. ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும் அதற்கு முன்னாலே  வா வா வா வா அழகுடன் இளமை  தொடர்ந்து வராது இருக்கின்ற போதே வா வா வா ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும் அதற்கு முன்னாலே  வா வா வா வா வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது ━கண்ணதாசன், போலீஸ்காரன் மகள், 1962 இன்று இறந்தன நாளை இறந்தன என் திறம் தரும் தன்மை இதால்; எனைக் கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!    ...