ஆண் பெண் பண்புகள் -- பண்டைத்தமிழர் கொள்கை
ஒரு மக்களின் பண்பாடு என்பது என்றுமே மாறாது என்பதற்கில்லை. அதன் அடிப்படைக் கூறுகள்கூட காலப்போக்கில் மாறக்கூடும். இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு மகளிற்குரிய சிறந்த பண்புகள் என்பது பற்றி இக்காலத்திலும் பண்டைக்காலத்தில் நம் தமிழ்ப் பண்பாடு முன்னிறுத்தியவற்றால் விளங்கும். இக்காலம் மகளிரிடையே நாம் போற்றும் நற்பண்புகள் பாரதி பாடல்களில் பரக்க உரைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு விரித்தல் மிகை. பண்டைக்காலத்தில் நம் மக்கள் போற்றிக்கொண்டாடிய மகளிர் பண்புகள் யாவை? தொல்காப்பியம், அதன் உரை, இறையனார் களவியல் உரை போன்றவற்றில் இதற்கு விடை காணலாம்: மகடூஉக்குணம் makaṭūu - k - kuṇam , n. மகடூஉ +. Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu; பெண் களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம். நாணம் nāṇam , n . < id. [T. nāna , M. nāṇam .] Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam , q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை. மடம்¹ maṭam , n . cf. mūḍha . 1. Ignorance, folly; அறியாமை. மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927). 2. Si...