தனித்தமிழ் இயலுமா? நாம் அனைவரும் தனித்தமிழையே பயன்படுத்தவேண்டும், வேற்றுமொழிக்கலப்பு இருக்கவே கூடாதென்று பலரும், மேடையிலும் ஊடகங்களிலுமாவது, வலியுறுத்தி வருகின்றனர்.இதில் மீயளவு (அதாங்க, அதிகபட்சம்!) எதிர்ப்பு சமஸ்கிருதம் என்று அடையாளங் காணப்படும் சொற்களுக்கே வருகின்றன. ஆங்கிலச்சொற்கள் அத்துணை எதிர்ப்புக்காளாவதில்லை. சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணற்ற தமிழ்ச்சொற்களை அவை தனித்தமிழென்றே நினைத்துக்கொண்டு பயன்படுத்துவது இங்குப் பரவலாகக் காணப்படுவது என்பது தனிக்கதை! “திராவிட மாடல் அரசு” என்பதில்கூட தனித்தமிழ் காணமுடியாதவர்கள் “வடமொழி வழக்கொழிந்த மொழி” என்று கூக்குரலிடுகின்றனர். சமஸ்கிருதம் எக்காலத்திலும் பேச்சுவழக்கு மொழியாக இருந்ததில்லை என்று இந்த அறிவிலிகள் அறியமாட்டார்கள் அல்லது அறியாதது போல் நடிக்கின்றார்கள். சமஸ்கிருதம் ஆதிகாலத்திலிருந்தே (தொடக்ககாலத்திலிருந்தே என்று சொல்லலாம்தான்; ஆனால் அதிலும் “காலம்” என்று சமஸ்கிருதம் வருகின்றதே!) சமய, இலக்கிய, தத்துவ, அறிவியல் போன்றவற்றுக்கான சிறப்புமொழியாகவே இருந்துள்ளது, தொடர்கின்றது. இந்திய மொழிகள் அன...
Posts
Showing posts from May, 2022
- Get link
- X
- Other Apps
புதுமைப்பித்தன் கவிதைகள் “புதுமைப்பித்தன் தன் கிண்டலுக்கும் கேலிக்கும் வாகனமாக, சித்தர் பாடல்களில் ஆதாரம் தேடிய ஒரு செய்யுள் உருவத்தைக் கையாண்டு பார்த்தார். எழுதியுள்ள அளவில் அவர் வெற்றிகண்டார் என்றே சொல்ல வேண்டும். மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்.” – சரஸ்வதி ஆண்டுமலர் 1959இல் வெளிவந்த கட்டுரை – கவிதை, கலையின் பிறப்பு, க.நா.சு மகா காவியம் காளான் குடை நிழலில் கரப்பான் அரசிருக்க, வேளான் குடியூரில் வெள்ளெருக்கு மூட்டருகே கள்ளி தலைதூக்க காட்டெருமை புறத்தேறி சிட்டுக் குருவியவள் சிங்காரப் பாட்டிசைத்தாள். வரிசை வைக்கும் பாங்கிமார் வலசாரி இடசாரி சில்லென்ற ரீங்கார சிலம்புச் சிறகோடு பம்புக் கருமேகப் பந்தல் எடுத்து வர ஆறாயிரம் பூச்சி அமர்ந்த சபை நடுவே அத்தாணி மண்டபத்தின் அரியாசனத் தருகே பல்லி யமர்ந்திருந்து பதிவாய்க் குறிசொல்லும். உள்ளகுறி யத்தனையும் உண்மை யுண்மை என்பது போல் ஓணான் தலை அசைத்து மண்ணாலும் மாராசன் மனசைக் கவர்ந்திருக்கும். அச்சமயம், – உயரப் பறந்து வரும் வண்ணாத்திப் பூச்சியவள் வாகாய் விலகி, ஒரு த...