Posts

Showing posts from December, 2021

தனித்தமிழ் அழிவழி!

                                                    தனித்தமிழ் அழிவழி! வேற்றுமொழிக் கலப்பின்றி எம்மொழியும் வளரமுடியாது. வளர்ச்சி இல்லையேல் அம்மொழி தேய்ந்து, அழிந்து போகும். தமிழில் வேற்றுமொழிச் சொற்கள் கூடாதென்போர் தமிழுக்குப் பெருந்தீங்கு செய்கின்றனர்.                சொல்வளம் (vocabulary) என்பது யாது? மொழி உரைக்கும் பொருள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சொல், அதுவும் ஒற்றைச்சொல், இருக்கவேண்டும். அச்சொல் வேறு பொருளையோ பொருட்களையோ குறித்தாலும் அப்பொருள் தலைப்பொருளாகவாவது அமையவேண்டும். அப்படியானால் பேரகராதியில் குறிப்பிட்ட பொருள் முதலாவதாக வைக்கப்படும். அவ்வாறன்றி, வேறு பொருளைத் தலைப்பொருளாகக் கொண்ட ஒரு சொல்லை குறிப்பிட்ட ஒரு பொருளுக்கும் பயன்கொள்வது தவறன்று, ஆயின் சிறப்பின்று. அவ்வாறே இச்சொற்கள் கொண்டு உருவாவதும் தவறன்று, ஆயின் சிறப்பின்று. இதற்கு எடுத்துக்காட்டுகள் பல சொல்லிக்கொண்டே போகலாம். என...

‘அவன்’ என்பதா? ‘அவர்’ என்பதா? வேண்டாம் போலிவேடம்!

                ‘அவன்’ என்பதா? ‘அவர்’ என்பதா? வேண்டாம் போலிவேடம்! ‘தமிழ் இலக்கியத்தில் புதிய சகாப்தம் படைத்தவன் பாரதி.’  ‘மகாகவி பாரதி பாஞ்சாலி சபதம் என்னும் ஒப்பற்றதொரு குறுங்காவியத்தைப் படைத்தார்.’ பாரதியைக் குறித்து எழுதும் போது இவ்விருவகை விகுதிமுறையையும் நாம் காண்கின்றோம். சிலர் அவரை ஒருமையில் குறிப்பிட்டு ‘அவன்’ என்கின்றனர். வேறு சிலர் அவருக்கு மரியாதைப் பன்மை தந்து ‘அவர்’ என்கின்றனர். இவற்றுள் எது முறை? இந்தப் பிரச்சினை ஆங்கிலத்தில் இல்லை. அதில் ஒருமை பன்மை உண்டே தவிர மரியாதைப் பன்மை என்றொன்று கிடையாது. மன்னனுக்கும் ஒருமைதான்; மாடனுக்கும் ஒருமைதான். தமிழில் ஆண்பால் ஒருமைக்கு ‘அன் விகுதியும் பெண்பால் ஒருமைக்கு ‘அள்’ விகுதியும் என்றே சங்ககாலத்தில் வழங்கியது. ‘ஆர்’ என்னும் விகுதி பன்மைப்பொருளில் மட்டுமே வந்தது. மரியாதைப் பன்மை விகுதி என்று ஒன்று அன்று இன்று. அரசனோ ஆண்டியோ தந்தையோ மகனோ ஆசிரியரோ குருவோ தேவனோ தெய்வமோ எவரென்றாலும் ‘அன்’ விகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பெருங்காப்பிய அளவில் ஒருமை நிலைக்கும் மரியாதை கருதி ‘ஆர்’ விக...
 The Hypocrisy of  Protesting Against Cat and Dog Meat - All Animals Are Equal, But Some Are More Equal Than Others! One of the ridiculous outcries of late is the protest against eating dog and cat meat. Why are they special? If it is that they are animals, so are sheep, chicken, fish, fowls of various sorts, cows, bulls, buffaloes, camels and all the creatures relished by people of various countries.  Is it because cats and dogs are looked upon as pets, closer to our hearts than other animals? If so, cows are worshipped as divine by the majority of Hindus, but no “intellectual” protests the slaughtering of cows for consumption!  This entirely smacks of hypocrisy, nothing else. However, objective thinking is rare amongst people, more so with regard to food.