மனமார்ந்த தீயமுன்நோக்கம் --- அறம்நிலையாத்துறையால் அடுத்த கேடு!
மனமார்ந்த தீயமுன்நோக்கம் அறம்நிலையாத்துறையால் அடுத்த கேடு! குற்றவியல் சட்டத்தில் “மனமார்ந்த தீயமுன்நோக்கம்” என்பது தகுந்த காரணமோ மீறமுடியாத தூண்டுதலோ இன்றி ஒரு குற்றத்தைச் செய்யும் மனநிலையாகும். “அது வெறுமனே பகையுணர்ச்சியோ வன்மமோ மட்டுமன்று. பொதுவாக அஃது ஒரு கொடிய, இழிந்த, பொல்லாங்கு நிறைந்த ஓர் உள்ளத்தின் தீய திட்டமாகும்: தீங்குசெய்யும் மனப்பாங்கு. அது வெளிப்படையாகவும் இருக்கலாம், குறிப்பாகவும் இருக்கலாம்” என்று சட்ட நுன்னுரைகளிற் தலைசிறந்தவரான ப்ளாக்ஸ்டோன் என்னும் ஆங்கிலேய நீதிபதி இங்கிலாந்து நாட்டுச் சட்டக் குறிப்புரைகள் (Commentaries on the Laws of England, The Clarendon Press, Oxford, 1765 -1769) என்னும் தம் நூலிற் கூறியுள்ளார். எனவே, ஒரு குற்றத்தைச் செய்பவன் அதன் விளைவு இன்னதாக இருக்குமென்றும் அது தீயதென்றும் அறிந்திருந்தும் அக்குற்றத்தைச் செய்தானானால் அவன் மனமார்ந்த தீய...