ஆபாசம் மாறும் காலங்கள் தோறும், ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்!
ஆபாசம் மாறும் காலங்கள் தோறும், ஆனாலும் கோணல் மாறாது எந்நாளும்! டி.ஆர். சுரேஷ் கோவில்களில் காணப்படும் சிலைகளை ஆபாசக் கண் கொண்டு நோக்கிப் பழித்துரைக்கும் இழிந்த பண்பு சென்ற நூற்றாண்டிலிருந்தே ஆங்காங்கே காணப்படுகிகின்றது. இதிலும் தமிழகம் முன்னோடியாகவே நிற்கின்றது. கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் வரும் அங்கவர்ணனைகளையும் இவ்வாறே மாறுகண் கொண்டு கூறுவோர் சிலரிருந்தனர். (மற்ற காப்பியங்கள், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைக் குறைகூற இவர்கள் துணிந்ததேயில்லை என்பது வேறு விஷயம்.) இக்காலம் இரண்டாம் கோளாறு அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆனால் முதல் கோளாறு மீள்நோய் போன்று அவ்வப்போது வருகின்றது. இந்த மேதாவிகள் M F ஹுஸைன் போன்றோர் தெய்வ...