Posts

Showing posts from August, 2022

"யான் செய் புண்ணியம் அனைத்தும்" - 28/08/22 தினமணி தமிழ்மணியில் பிழைபட்ட விளக்கம்

Image
  "யான் செய் புண்ணியம் அனைத்தும்" Inbox T R Suresh   < sureshtr1957@gmail.com > 18:06 (0 minutes ago) to  thamizhmani அன்புடையீர்! வணக்கம். 21/08/2022 தேதியிட்ட  தமிழ்மணி யில் "யான் செய் புண்ணியம் அனைத்தும்" என்னும் தலைப்பில் வந்த கட்டுரையைக் கண்டேன்.  தருமன் சூதாட்டத்தில் விருப்பமுடையவன் என்று  மகாபாரத த்தில் கூறப்பட்டுள்ளது. விதுரனும் சூதாடி நாட்டையும் செல்வத்தையும் கைப்பற்றவே துரியோதனன் தருமனை அத்தினாபுரம் வருமாறு தன் தந்தை திருதராட்டிரன் மூலம் அழைப்பு விடுத்துள்ளான் என்று எச்சரிக்கின்றான். எனினும், தருமன் முதலில் சகுனியுடன் சூதாட மறுத்து, கர்ணனால் சீண்டப்பட்டு அதற்கு உடன்படுகின்றான் என்று கூறுகிறார் வில்லிபுத்தூர் ஆழ்வார்.  முதலில் பணையமாக வைத்த மணிமாலையையும் அடுத்து கிருஷ்ணன் தந்த தேரையும் தருமன் சகுனியிடம் இழக்கின்றான் என்று கூறிய வில்லிபுத்தூரார், அடுத்த செய்யுளில் தருமன் பலவற்றைக் கொடுத்தான் என்கின்றார். இதை விரும்பிக் கொடுத்ததாக கட்டுரையாசிரியர் கூறியுள்ளது வலிந்து பொருள் கோடலின்பாற்...
Image
  தினமணி நாளிதழில் ஞாயிறுதோறும் தமிழ்மணி எனும் சிறப்பான பகுதி தமிழிலக்கியம் பற்றிய கட்டுரைகளுடன் வருகின்றது. என் கட்டுரை ஒன்றும் அதில் வெளிவந்துள்ளது. நிற்க. கட்டுரைகளில் தவறான கூற்றுகள் வருவதுமுண்டு. அவை பற்றி நானும் எழுதியனுப்புவதுண்டு. அவ்வகையில் இரண்டை இங்குக் காணலாம். இவற்றின் சுருக்கப்பட்ட வடிவங்கள் தமிழ்மணி யில் வெளிவந்துள்ளன. அன்புடையீர்!           29-04-18 தேதியிட்ட தமிழ்மணி கண்டேன். காப்பியங்களில் அறிவியல் ஆளுமை என்று ஒரு கட்டுரை அதில் வந்துள்ளது.  "மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் கூறியுள்ளார். அந்த மூலப்பொருள் எது என்பதைத்தான் இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளது." இது கட்டுரையிலுள்ள முதற்கூற்று.           மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதே முதற்கண் முழுத்தவறு. ஒவ்வொரு வகை மணியும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவை என்பதே மெய். இளங்கோவடிகள் 'ஒருமைத் தோற்றத்து' என்றுள்ளார். இதற்கு உரை 'ஒன்றுபட்ட பிறப்பு' என்று தரப்பட்டுள்ளது. ...