Posts

Showing posts from January, 2024

வெண்ணெய்நல்லூர்ப் பெருமுனி என்னும் பித்தன் வழக்கு

வெண்ணெய்நல்லூர்ப் பெருமுனி  என்னும்     பித்தன் வழக்கு சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவபெருமான் தடுத்தாட்கொண்ட வரலாறு -  நீதிமன்ற நோக்கில்  தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி நாயனார் சடங்கவி சிவாசாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார். அவர்களின் கல்யாணத்துக்கு மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆணழகனாகிய சுந்தரர் சடங்குமுறையான நல்லாடைகளைப் பொருத்தமாக அணிந்துகொண்டு வைதிக மாட்சியில் ராஜகளையுடன் பிரகாசிக்கின்றார். எழிலார்ந்த மணமகள் நற்குணங்களின் தலைநிலை உறைவிடமாக உள்ளாள். புரோகிதர்கள் குழுமியுள்ளனர். திருமண விருந்தினர் அனைவரும் திரண்டுள்ளனர். மகிழ்ச்சி கரைபுரண்டோடும் நேரம் அது. மங்கலச்சடங்குகள் தொடங்கவுள்ளன.  அப்போது, போற்றுதற்குரிய பழுத்த வயோதிக அந்தணர் ஒருவர் திடீரென்று தூரத்தில் தென்பட்டார். அவர் வயதால் முதுகுவளைந்து போனவர். நடப்பதற்கு உதவியாக அவரிடமோர் ஊன்றுகோல் இருக்கின்றது. அவர் கோணல்மாணலாக வருகின்றார். ஆனால் அவர் மிகவும் அவசரத்திலுள்ளது போல் தோன்றுகின்றது. முதுமையே அவருடைய கவினார்ந்த வடிவில் கால்கொண்டு வருவதுபோன்று தோன்றுகின்ற...

திறம் மாறிய சொற்கள்

                      திறம் மாறிய சொற்கள்  புதியன, பழையன, வெகுஜன, அரியன— அனைத்துச் சொற்களையும் பயிலுதல் நமக்கு அவசியம்.  என்னை? பின்வரும் அடிகளைக் நோக்குங்கள்:             " சொற்கள் நெரிகின்றன, பிளக்கின்றன,  சில போது உடைகின்றன, சுமை தாங்காது இறுக்கத்தில், அழுத்தத்தில் முடியாமல், வழுக்குகின்றன, சரிகின்றன, மடிகின்றன, துல்லியம் கெட்டு மக்கிப் போகின்றன, தம் இடத்திற் தங்கி நிற்பதில்லை, அலைவின்றி அவை அமைவதில்லை … … …"  ( கட்டுரையாளனின் மொழிபெயர்ப்பு) என்பது ஆங்கிலக்கவி டி.எஸ். எலியட் வாக்கு. மொழி மட்டுமன்று, சொற்களும் மாறிக் கொண்டேதான் இருக்கும். " ஏனெனில், சென்ற ஆண்டின் சொற்கள்       முடிந்த ஆண்டின் மொழிக்குரியன;      வரும் ஆண்டின் சொற்களோ                                            ...