Posts

Showing posts from March, 2023
தனித்தமிழ் என்னும் கானல்நீர்!   திரு. வைகைச்செல்வன்   பிறமொழி கலப்பின்றிப் பேசுவோம்!  என்று தம் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்   (தினமணி 02.03.23) . ( பிறமொழி க்   கலப்பின்றி என்றிருக்க வேண்டும். அது வேறு கதை!) தமிழில் இணைச்சொல் இல்லாததால் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவது ஒன்று. இணைச்சொற்கள் இருந்தாலும் பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்து வது மற்றொன்று. முதலாவது தவிர்க்க முடியாதது. மற்றது தவிர்க்கக்கூடியது. இவ்வ்விருவகையையுமே இவர் கட்டுரையில் காணமுடிகின்றது. முதலாவது வகையினவாக இதில் வருவன  இலக்கியம், இலக்கணம், உலகம், இதிகாசம்,  அமுது, பாடம்  போன்றன.  இரண்டாவது வகையினவாக இதில் வருவன  நாகரிகம், சுவாசப்பை, தேய்மானம், நகர்ப்புறம்  போன்றன. இவற்றுக்குத் தமிழிலேயே முறையே பண்பாடு, மூச்சுப்பை, தேய்வு, பேரூர்ப்புறம் என்னும் தமிழ்ச்சொற்கள் உள. இவற்றையே தவிர்க்கமுடியாத நிலையில், கட்டுரையாளரின் கூற்று நிறைவேறுவது எங்ஙனம்? எது தனித்தமிழ், எது இறக்குமதி என்பதை வேறுபடுத்த முடியாதவாறு பல்லாயிரம் சொற்கள் தமிழாகவே...