ஆண் பெண் பண்புகள் -- பண்டைத்தமிழர் கொள்கை

 ஒரு மக்களின் பண்பாடு என்பது என்றுமே மாறாது என்பதற்கில்லை. அதன் அடிப்படைக் கூறுகள்கூட காலப்போக்கில் மாறக்கூடும். இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு மகளிற்குரிய சிறந்த பண்புகள் என்பது பற்றி இக்காலத்திலும் பண்டைக்காலத்தில் நம் தமிழ்ப் பண்பாடு முன்னிறுத்தியவற்றால் விளங்கும்.

இக்காலம் மகளிரிடையே நாம் போற்றும் நற்பண்புகள் பாரதி பாடல்களில் பரக்க உரைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு விரித்தல் மிகை. பண்டைக்காலத்தில் நம் மக்கள் போற்றிக்கொண்டாடிய மகளிர் பண்புகள் யாவை? தொல்காப்பியம், அதன் உரை, இறையனார் களவியல் உரை போன்றவற்றில் இதற்கு விடை காணலாம்:

மகடூஉக்குணம் makaṭūu-k-kuṇam , n. மகடூஉ +. Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu; பெண் களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம்.

நாணம் nāṇam , n. < id. [T. nāna, M. nāṇam.] Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை.

மடம்¹ maṭam , n. cf. mūḍha. 1. Ignorance, folly; அறியாமை. மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927). 2. Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை.

அச்சம்¹ accam , n. < அஞ்சு-. [M. accam.] Fear, dread, terror; பயம். (பிங்.)

பயிர்ப்பு payirppu , n. < பயிர்³-. Delicacy, modesty, shrinking from anything strange, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் கண்டறியாதன கண்டுழி உண்டாம் மனங் கொள்ளாநிலை.


நம் முன்னோர்கள் ஆண்களுக்குரியனவாகவும் நாற்குணங்களை வகுத்துள்ளனர். அவை வருமாறு:

ஆடூக்குணம் āṭūu-k-kuṇam , n. < ஆடுஉ +. Masculine qualities, which are four, viz., அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. (பிங்.) 

 அறிவு aṟivu , n. < அறி-. 1. Knowledge, wisdom; ஞானம். 2. Intelligence; புத்தி. (குறள், 429.)

நிறை⁵ niṟai , n. < நிறுவு-.Strength of mind, moral firmness, one of four āṭuu-k-kuṇam, q.v.; ஆடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான காப்பனகாத்துக் கடிவனகடியுந் திண்மை. (பிங்.) (இறை. 2, 29.) 

ஓர்ப்பு ōrppu , n. < ஓர்²-. 1. Investigation, research, careful consideration, one of the four kinds of āṭūu-k-kuṇam, q.v.; ஆராய்ந்துணர்கை. (இறை. 2, 29)

கடைப்பிடி² kaṭai-p-piṭi , n. < கடைப்பிடி-.Having in mind what one has learnt with certainty, one of the four kinds of āṭūu-k-kuṇam; அறிந்துகொண்ட பொருளை மறவா மை. (இறை. 2, 29.)


இதற்கேதும் மாற்றமுண்டா தெரியவில்லை.


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare