தனித்தமிழ் இயலுமா?


நாம் அனைவரும் தனித்தமிழையே பயன்படுத்தவேண்டும், வேற்றுமொழிக்கலப்பு இருக்கவே கூடாதென்று பலரும், மேடையிலும் ஊடகங்களிலுமாவது, வலியுறுத்தி வருகின்றனர்.இதில் மீயளவு (அதாங்க, அதிகபட்சம்!) எதிர்ப்பு சமஸ்கிருதம் என்று அடையாளங் காணப்படும் சொற்களுக்கே வருகின்றன. ஆங்கிலச்சொற்கள் அத்துணை எதிர்ப்புக்காளாவதில்லை. சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணற்ற தமிழ்ச்சொற்களை அவை தனித்தமிழென்றே நினைத்துக்கொண்டு பயன்படுத்துவது இங்குப் பரவலாகக் காணப்படுவது என்பது தனிக்கதை!


“திராவிட மாடல் அரசு” என்பதில்கூட தனித்தமிழ் காணமுடியாதவர்கள் “வடமொழி வழக்கொழிந்த மொழி” என்று கூக்குரலிடுகின்றனர். சமஸ்கிருதம் எக்காலத்திலும் பேச்சுவழக்கு மொழியாக இருந்ததில்லை என்று இந்த அறிவிலிகள் அறியமாட்டார்கள் அல்லது அறியாதது போல் நடிக்கின்றார்கள். சமஸ்கிருதம் ஆதிகாலத்திலிருந்தே (தொடக்ககாலத்திலிருந்தே என்று சொல்லலாம்தான்; ஆனால் அதிலும் “காலம்” என்று சமஸ்கிருதம் வருகின்றதே!) சமய, இலக்கிய, தத்துவ, அறிவியல் போன்றவற்றுக்கான சிறப்புமொழியாகவே இருந்துள்ளது, தொடர்கின்றது. இந்திய மொழிகள் அனைத்திலும் அதன் பாதிப்பும் பங்களிப்பும் உள்ளன. தமிழ், இந்தி, உருது, மணிபுரி போன்ற வட்டார மொழிகள் அவ்வவ் வட்டாரங்களில் மட்டுமே வழங்கிவந்துள்ளன. ஆனால், ஆங்கிலம் வருமுன்னர் இந்தியா முழுவதும் அறியப்பட்டு வந்த ஒரே மொழி சமஸ்கிருதம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆதிசங்கரர் முதல் முத்துஸ்வாமி தீக்ஷிதர் வரை சமஸ்கிருதத்தின் துணைகொண்டே அவர்கள் இந்தியா முழுவதும் பயணம்செய்தார்கள் (ஸ!) என்பதை மறக்கலாகாது. 


நிற்க. தனித்தமிழ் வழக்கு எந்த அளவு இயலும் என்பதை ஒரு நாளிதழில் காண்போம். “தினமணி” தமிழை மிக்குப்போற்றும் நாளிதழ். அதன் 05.05.22-ஆம் நாளைய இதழின் முதல் பக்கத்தை (ஸ!) ஆய்ந்த போது கிடைத்த விவரம் (ஸ!):


அதிகரி++++ அமைச்சகம்+ ++(அமாத்யா) அமைச்சர் +++ அரசு++++++ அனுமதி குடியரசு++++++(அரசு) 


ஆசிரியர் ஆதீனம்+++++++++ ஆலோசனை++ 


இன்ஸ்டண்ட் ஏது 


கட்சிகள்+++  காப்பி காபி காலமாக+ 


சதவீதம்+++++ பேரவை++++++++ (சபை) சந்தித்து + சமயம் சர்க்கரை சர்பத் சுதந்திரம் சுமுக சோப்  


ட்யூப் டயர் டிவி  


தாக்கல் தாமதமில்லாமல் தாமிரம் தினம் தானியங்கள் தீர்மானம் துலாக்கோல் தெய்வீக தேதி 

நபர் நிமிஷம் நிர்ணயம் நிலையங்கள் (நிலய) நீதிமன்றம்+


  பட்டணம்+++++++ பணம்+ பல்லக்கு+++ பாகங்கள் பாதை பாலிசிதாரர் பிக்சர் பிரச்னை பிரதமர் + பிரவேசம்+++++++ பிளஸ் 2+ பிளாஸ்டிக் பீடம்++ பெட்ரோலியம் 


மத்திய ++++ மதம் மடம் மனிதன் + மாணவர்+++++ மசோதா+++ ++++ ++++ ++++ மாதங்கள்++ மாநிலம் மார்பிள் மானியம் (மான்ய) மூலமாக மோட்டார் +


ரகம் ரப்பர் ரிசர்வ்+++ ரிவர்ஸ் ரெபோ+++ லட்சம்


வங்கி++++++ வர்த்தகம் +++,வாகன ++ விகிதம்+++++++ விவகாரம்++++ விவாதம்+++ விஷயம் + 

ஜீயர் 


முதல் பக்கத்தில் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது 224 தனித்தமிழல்லாத சொற்கள். அவை மிகப் பெரும்பாலும் சமஸ்கிருதம் அல்லது சம்ஸ்கிருத மூலமுடையன. ஆங்கிலம், உருது சொற்களும் உண்டு. மிக அதிகமாகக் காணப்பட்ட சொற்கள் வருமாறு:

மசோதா வங்கி விகிதம் மாணவர் பட்டணம் அரசு ஆதீனம் அவை சதவீதம் அமைச்சு 


தனித்தமிழ் என்பதெல்லாம் அன்றாட வாழ்க்கையில்கூட ஆகாயக்கோட்டைதான். நடைமுறையில் கவைக்கு உதவாத பேச்சு அது.


இதனால் எனக்குத் தமிழ்ப்பற்றில்லையென்று கூறுவோர் கூறட்டும். என்னிடம் வேண்டுமளவு தமிழ்ப்பற்றுண்டு. கண்மூடித்தனமான அளவு கிடையாது.


இந்த நாளிதழின் முதற்பக்கத்தைச் செந்தமிழில் முற்றுமாக மாற்றித்தருபவருக்கு நான் பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்க விரும்புகிறேன்.


முயல்வோருக்கு வாழ்த்துகள்!


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare