In ancient Hindu Law, twelve types of sons were recognised. They are as follows:
புத்திரன் puttiraṉ , n. < put-tra. 1. Son, of 12 kinds according to Hindu law, viz., auracaṉ, kṣēttirajaṉ, tattakaṉ, kiruttirimaṉ, kūṭacaṉ, apavittaṉ, kāṉīṉaṉ, cakōṭacaṉ, kirītaṉ, pauṉarppavaṉ, cuvayan-tattaṉ, cauttiraṉ; ஔரசன், க்ஷேத்திரஜன், தத்தகன், கிருத்திரிமன், கூடசன், அபவித்தன், கானீனன், சகோடசன், கிரீதன், பௌனர்ப்பவன், சுவயந்தத்தன், சௌத்திரன் என்று தருமசாத்திரத்திற் கூறப்படும் பன்னிருவகைப் புதல் வர்களுக்கும் பொதுப்பெயர். 2. Disciple, pupil; மாணாக்கன். புத்திரரோடுங் கூடிப்போவதே கருமம் (திருவாலவா. 54, 37).
ஔரசபுத்திரன் auraca-puttiraṉ , n. < aurasa +. Lit., produced from the breast, own son, legitimate son; son by a wife of the same caste married according to the prescribed rules, one of twelve kinds of puttiraṉ, q.v. opp. to சுவீகாரபுத்திரன்; சொந்தப்பிள்ளை.
க்ஷேத்திரஜன் பிள்ளை பிறப்பதற்கு முன் இறந்துபோனவன், பேடி, பிள்ளை பிறக்க விரோதமான பிணியுற்றவன், இவர்களின் மனைவியரிடத்தில் மைத்துனன் முதலானவர்களால் விதிப்படி உண்டுபண்ணப்பட்ட பிள்ளை.
தத்தகன் tattakaṉ , n. < dattaka. Adopted son, son given by his parents to a person who legally adopts him, one of twelve puttiraṉ, q.v.; சுவீகார புத்திரன்.
கிருத்திரிமன் kiruttirimaṉ , n. < id. Artificial or adopted son; adult son adopted without the consent of his natural parents, one of 12 puttiraṉ, q.v.; பெற்றோர் அனுமதி யின்றிச் சுவீகாரபுத்திரனாகச் செய்துகொள்ளப்பட்ட வன்.
கூடசன் kūṭacaṉ , n. < gūḍha-ja. Son born secretly of a woman when her husband is absent, the real father being unknown, one of twelve puttiraṉ, q.v.; பன்னிரண்டுவகைப் புத்தி ரருள் கணவன் வீட்டிலில்லாத காலத்தில் இன்னா னென் றறியப்படாத ஒருவனுக்கு ஒருத்தியிடம் தோன் றிய மகன்.
அபவித்தன் apa-vittaṉ , n. apa-viddha. Son abandoned by his parents and adopted by a stranger, one of twelve puttiraṉ, q.v.; பெற் றோரால் விடப்பட்டுப் பிறரால் தத்துக் கொள்ளப்பட்ட மகன்.
கானீனன் kāṉīṉaṉ , n. < kānīna. 1. Son of an unmarried woman, as Vyāsa, one of 12 puttiraṉ, q.v.; கன்னிபெற்ற மகன். (திவா.) 2. Karṇa, son of Sūrya by Kunti, born during her maidenhood; கன்னன். (பிங்.)
சகோடன் cakōṭaṉ , n. < sahōḍha. Son begotten by another father but born after marriage, as received with the bride, one of twelve puttiraṉ q.v.; பிறனுக்குண்டான கர்ப்பத் தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்திற் பிறந்தவன். (மநு. 9, 173.)
கிரீதன் kirītaṉ , n. krīta. Son purchased from his natural parents and adopted, one of 12 puttiraṉ, q.v.; பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சுவீகாரபுத்திரன். (ஏலா. 31.)
பௌனர்ப்பவன் paunarppavaṉ , n. < paunarbhava. Son born to a woman by her first husband considered as a son of the husband who marries her on her widowhood one of 12 puttiraṉ, q. v.; புத்திரர் பன்னிருவகை யினருள் ஒருத்தியிடம் முதற்கணவனுக்குப் பிறந்த வனும் விதவையானபின் அவளை மணந்த இரண்டாங் கணவனால் மகனாகக் கருதப்படுபவனுமான புத்திரன். (ஏலாதி, 31.)
சுவயந்தத்தன் cuvayan-tattaṉ , n. id. + datta. Self-given son, son adopted with his own consent, one of twelve puttiraṉ, q. v.; புத்திரர் பன்னிருவருள் தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன்.
சௌத்திரன் cauttiraṉ , n. < šaudra. Son of a Šūdra mother and a father belonging to any one of the first three castes, one of twelve puttiraṉ, q.v.; முதன்மூன்று குலத்தைச்சேர்ந்த ஒரு வனுக்குச் சூத்திரஸ்திரீயிடம் பிறந்தவன். (சங். அக.)
Comments
Post a Comment