Widow Remarriage : Mahakavi Bharati vs the Mahatma and Swami Vivekananda

 

The following is an excerpt from Subramania Bharati - Patriot and Poet by Professor P. Mahadevan. 

On the question of widow remarriage, Bharati crosses swords with the Mahatma himself, and shows up his (Gandhiji's) suggestion as a cure worse than the disease. For Gandhiji had said that the evil (as he considered it!) could be solved by prohibiting the remarriage of men. Bharati says in his most pleasant tone that it is a counsel of perfection, and that none was likely to follow it. He adds that even widowers have as good a right to their happiness as others, and that a privation imposed on them would only work underground havoc!

இதன் மொழிபெயர்ப்பு வருமாறு:

கைம்பெண் மறுமண விஷயத்தில் மகாத்மா காந்தியுடனேயே அவர் கருத்து மாறுபாடு கொண்டார். இச்சிக்கலுக்கு மகாத்மா முன்வைத்த யோசனை அந் நோயினும் கொடிய மருந்தாகும் என்று அவர் புலப்படுத்தினார். எனின் ஆண்களின் மறுமணத்தைத் தடைசெய்வதன் மூலம் இக்கொடுமைக்குத் தீர்வு காணலாம் என்று காந்திஜி கூறியிருந்தார். அந்த அறிவுரை அதி உன்னதமான ஆயின் எவருக்கும் செயலுக்கு இயலாத ஆலோசனை என்று உச்ச இதவான மொழியில் பாரதி கூறுகின்றார். மற்றவர்களைப் போன்றே மனைவியை இழந்தவர்களும் மகிழ்ச்சிக்கும் இன்புறுவதற்கும் உரிமையுள்ளவர்களே என்றும் அவ்வாறன்றி அவர்கள் மீது இன்பஇழப்பொன்று சுமத்தப்பட்டால் அது கண்ணுக்குத் தெரியாத பேரழிவையே  உண்டாக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்!

--சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றாளர், நல்லிசைக் கவிஞர், பேராசிரியர் பி. மஹாதேவன் 


இது பற்றி நீண்டதொரு வாதம் நிகழ்ந்தது. அது போது பாரதி மகாத்மாவை மட்டுமன்றி ஸ்வாமி விவேகானந்தரையும் இவ்விஷயத்தில் எதிர்த்து நின்றார். அவ்விவரங்களையும் அவற்றின் மொழிபெயர்ப்பையும் கீழே காணலாம்:


Bharati's proposal:

"Women who have lost their husbands may have lost their companions but still possess their bodies. They have lost neither their five senses, nor their feelings, nor the human heart, nor the yearning for companionship nor the means to experience and express such companionship."

Thus it is a grave injustice and a humanitarian tragedy if remarriage is denied to bereaved women.


பாரதியின் கருத்து முன்வைப்பு 

தம் கணவன்மாரை இழந்த பெண்கள் தங்கள் துணைவரை இழந்திருந்தாலும் தம் உடல்களை இன்னமும் உடைத்தோராய் உள்ளார்கள். தம் ஐம்புலன்களையோ உணர்ச்சிகளையோ மானுட இதயத்தையோ உடன்துணை வேண்டும் அவாவையோ அத்தகைய துணையை அனுபவிக்கும் வழிவகையையோ அவர்கள் இழக்கவில்லை. எனவே, கைம்பெண்களுக்கு மறுமணம் மறுக்கப்பட்டால் அது பெரும் அநீதியும் மனிதகுல துர்ப்பாக்கியமுமாகும். 



Gandhi's response:

It is the practice of men remarrying promptly after their wives depart, that is leading to the indignant feminist calls for women to exercise the right to do similarly. The solution is for men too to eschew remarriage.

தம் மனைவிமார் மறைந்த உடனேயே மறுமணம் செய்து கொள்ளும் ஆண்களின் வழக்கமே


மகாத்மாவின் மறுகூற்று 

பெண்களும் அதே போன்ற உரிமையை மேற்கொள்ள வேண்டுமென்று அழைக்குமாறு கோபம் மூண்டுள்ள பெண்ணுரிமைப் போராட்டக்காரர்களைத் தூண்டுகின்றது. 


Bharati's rebuttal to Gandhi:

When called to support emancipation of women from the weeds of widowhood, the Mahatma is instead advocating bondage of men too to those very privations and deprivations! 


மகாத்மாவுக்கு பாரதியின் எதிருரை 

பெண்களைக் கைம்பெண் காலத்திலிருந்து விடுதலை பெறுவதை ஆதரிக்குமாறு அழைத்தால் அதற்கு மாறாக ஆண்களும் அதே இழப்புக்கும் இடர்ப்பாட்டுக்கும் அடிமையாவதை மகாத்மா பரிந்துரைக்கின்றார்!


(Bharati was vociferous in his rejection of Gandhi's much overused method of asceticism as atonement, and argued that only what is life-affirming can be truly emancipatory.)

(மிகையளவு கொள்ளப்பட்ட காந்தியின் துறவுவாழ்க்கையை பாரதி கடுமையாக மறுத்தொதுக்கினார். உயிருக்கு உறுதி தருவது எதுவோ அதுவே உண்மையாக விடுதலையளிப்பது என்று வாதிட்டார்.


Vivekananda's response:

Reformists from the depressed classes are more radical in their demands for widow-remarriage than those from the classes deemed upper-castes. Part of the reason for this state of affairs may be demographics, since women seem to outnumber men in the upper social strata and men seem to outnumber women in the lower social strata. It may not be prudent to attempt to change this state of affairs overnight, given that we would also have to ignore the counsel of the sages of old if we did so in a hurry.


விவேகானந்தரின் மறுகூற்று 

மேல் சாதியினர் என்று கருதப்படும் வகுப்புகளைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளைவிட தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் விதவாவிவாகம் பற்றிய தம் கோரிக்கைகளில் இன்னும் தீவிரமாக உள்ளனர். மக்கட் தொகை வேறுபாடுகள் இந்நிலைமைக்கு ஓரளவு காரணமாக இருக்கக்கூடும். ஏனெனில் சமூகத்தின் மேல் அடுக்குகளில் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலும் சமூகத்தின் கீழ் அடுக்குகளில் ஆண்கள் பெண்களைவிட அதிக எண்ணிக்கையிலும் இருப்பதாகத் தோற்றுகின்றது. விஷயம் இவ்வாறு இருக்கும் நிலைமையை ஒரேநாளில் மாற்ற முயல்வது விவேகமாகாது. எனின் அவ்வாறு அவசரப்பட்டு நாம் செய்தால் பண்டைக்காலப் பெரியோர்களின் அறிவுரைகளையும் நாம் அலட்சியப்படுத்த வேண்டி இருக்கும்.



Bharati's rebuttal to Vivekananda:

The Swami is evading a moral question by citing statistics. The numbers may well be right, but cannot be reason enough to impose life-denying circumstances on even one woman.


விவேகானந்தருக்கு பாரதியின் எதிருரை 

புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் ஒழுக்கம் பற்றிய வினாவுக்கு விடை தராமல் சுவாமி மழுப்புகின்றார். அவர் முன்வைக்கும் எண்ணிக்கைகள் சரியாகவே இருக்கலாம். ஆனால் வாழ்வு மறுக்கும் சூழ்நிலையை ஒரேயொரு பெண்ணின் மீது சுமத்துவதைக் கூட அது நியாயப்படுத்த முடியாது.


(Bharati's robust stance here that ethical challenges cannot be reduced merely to empirical claims, is a study in clarity on the distinction between factual claims and value propositions and a safeguard against the hazards of numbers games leading to indifference towards the rights of non-dominant groups.)

(அறநெறிச் சிக்கல்களை வெறுமனே காட்சி அளவைகளை மட்டும் கொண்டு தீர்க்க முடியாது என்னும் பாரதியின் உரம் வாய்ந்த மனப்பாங்கு நடப்பு நிலையை வைத்து அமையும் கூற்றுகளுக்கும் மதிப்பியல்வழி எழும் கருத்துரை முன்மொழிவுகளுக்கும் இடைவேறுபாடு காட்டுவதில் தெளிவுக்கு எடுத்துக்காட்டான ஒரு சித்திரிப்பாகும். அதிகாரமற்ற மக்கட் குழுவினரின் உரிமைகள் குறித்து அலட்சியத்தை விளைக்கும் எண்ணிக்கை விளையாட்டுகளின் அபாயங்களுக்கு எதிராக ஓர் இடர்காப்பையும் அஃது அளிக்கின்றது.)

http://nirmukta.net/archive/index.php?thread-1830.html 


Comments

Popular posts from this blog

A Piece From Shakespeare's Macbeth. ஸேக்ஷ்பியரின் ம-க்பெத் நாடகத்திலிருந்து ஒரு கீற்று.

திறம் மாறிய சொற்கள்

Comparitive Literature: Kannadasan, Kamban and Shakespeare