சங்ககாலம் மட்டும் மீண்டும் வேண்டுமோ?
அன்புடையீர்!
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்பது ஆன்றோர் கூற்று. ஆனால், "நிறைவேறக்கூடாத கனவு" என்னும் கட்டுரையில் (தினமணி 4.4.23) ஏதோ பண்டைத் தமிழகத்தில் பிராமணர் மட்டுமே உயர்குலம் என்றிருந்தது போன்றும் மற்ற மக்கள் அனைவரும் ஒரே குலமாக வாழ்ந்துவந்தது போன்றும் ஒரு மாயத்தோற்றத்தைக் காட்டுகின்றா ர். பிராமணரல்லாதாரிடையேயும் சாதிவே றுபாடு அன்று கடைப்பிடிக்கப்பட்டதை ஏன் அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை? இன்றும் பிராமணர் பட்டியல் இனத்தவர் மீது சாதிக்கொடுமை கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட் டப்படுவதை எங்குமே காணபதில்லையே! பிற "மேல்சாதியினர்"தாமே அக்கொடுமை யைத் தொடர்ந்து வருகிகின்றனர்?
"ஆரியர்"தாம் சாதிமுறையைக் கொணர்ந்தனர் என்பது பெருமையாகாது. அதைத் தவறென்று ஒதுக்கும் நல்லறிவு ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்குமே பல்லாயிரம் ஆண்டுகட்கும் இல்லாமல் போய்விட்டதா? "ஆரியர்கள்" தமிழ்நாட்டை வென்று இங்குத் தம் கலாச்சாரத்தைத் திணித்தனர் என்றெங்குமே இல்லையே! சாதி என்பது இங்கு வந்து புகுந்ததென்றால் அது அகிம்சாமுறையிலா?
பழந்தமிழர் கள் குடிப்பதைக் கொண்டாடி மகிழ்ந்ததை ஏன் அவர் குறிப்பிடவில்லை?
எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லது கீழாக, கட்டுரையின் இறுதியில் வேதகாலம் மீண்டும் வரக்கூடாது என்று வலியுறுத்தும் ஆசிரியர் சங்ககாலத்தையும் ஏன் அவ்வாறு சொல்லவில்லை? வருந்ததக்கவிதமாக, அவர் நடுநிலையோடு பேசவில்லை என்பது கண்கூடு.
அன்புடன்,
த.ரா. சுரேஷ்,
Comments
Post a Comment